9 Sept 2012

இந்து சோதிடம் (எ) இந்திய சோதிடம்


                  இந்து என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் என்றால் தாய் என்று பொருள். எனவே, இந்து மதம் உலகத்தின் தாய் மதமாகும். எனவே, இந்து சோதிட சாஸ்திரமானது இவ்வுலகில் வாழும் பிற சோதிட சாஸ்திரங்களுக்கெல்லாம் தாய் சோதிட சாஸ்திரமாகும். ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு எப்படி கபடமில்லாமல் உலக ரகசியங்களை தன் குழந்தைக்கு அன்போடு உபதேசிப்பாளோ அவ்வாறு முழுமையாக உபதேசிக்கும் சோதிடம் எனப்படும். வேத சோதிடம் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதற்கு இந்து சோதிடம் என்று மற்றொரு பெயரும் வழங்கலாயிற்று. ஊழ் வினையின் பயனாக விளையும் வாழ்க்கைப்பயிரில் ஏற்படும் களைகளைக் களைந்து வாழ்க்கைப் பயிர் செம்மையாக வளர்ந்து ஓங்க வழிகாட்டும் குரு உபதேசம் இந்து சோதிடம் ஆகும்.
           இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகிய முமூர்த்திகளை அடிப்படையாகக் கொண்ட தேவ குடும்பத்தினர்களின் அருளால் இவ்வுலக உயிர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் தீமைகளைக்களையும் பரிகார மார்கங்களாகிய தேவதாபிரதிட்டைகள் மற்றும் தேவதா வழிபாடு போன்ற தெய்வீக முறைகளை முழுமையாக விளக்கும் வேத சோதிடமே இந்து சோதிடம் எனப்படும். இந்து சோதிடமானது இந்தியாவில் பிறந்த சோதிட சாஸ்திரமாகையால் இதற்கு இந்திய சோதிடம் என்றொரு பெயரும் வழங்கலாயிற்று.

No comments:

Post a Comment