10 Sept 2012

நாடி சோதிடம்

                        நாடி வரும் ஆன்மாவிற்கு உபதேசிக்கப்படும் வாழ்க்கைப் பலன்கள் நாடி சோதிடம் எனப்படும். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிரதான சுவாச நிலைகல் இருவகைகளாகப் பிர்க்கப்பட்டுள்ளது. அவைகள் இடகலை (சூரிய கலை) மற்றும் பிங்கலை (சந்திர கலை) எனப்படும். இடகலை என்பது வலது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். பிங்கலை என்பது இடது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். மேற்கண்ட இரண்டு சுவாசக்கலைகளோடு மூன்றாவதாக ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது நாசிகளின் வழியாக சுவாசக்கலை நடத்துதல் சுழிமுனை எனப்படும். முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் மூன்றாம் கலையான சுழிமுனைக்கலையை நடத்தி உயிர் வாழ்பவர்களாவார்கள்.

                            சுழிமுனைக்கலையை நடத்துபவர்களுக்கு முக்கால ஞானத்தைப் பெறும் சித்தி ஏற்படும். சுழிமுனை நாடியை அடிப்படையாகக் கொண்டு அதன் உட்பிரிவுகளாகிய ஏழு சுவாசக்கலைகளையும் வெவ்வேறு சதவீத நிலைகளில் நடத்தலாம். சப்த நாடிகலைகளாவது அத்தி, அலம்புடை, காந்தாரி, சங்கினி, சிங்குவை, புருடன் மற்றும் குரு ஆகிய உட்பிரிவுக் கலைகளாகும். முனிவர்கள் தாங்கள் சுவாசிக்கும் பிரதான மற்றும் உட்பிரிவு நாடிகலைகளின் வழியாக அவர்களிடம் நாடி வரும் ஆன்மாக்களின் நல்வினை மற்றும் தீவினைப் பலன்களை ஞானத்தில் உணர்ந்து உலகத்திற்கு உணர்த்துவார்கள். எனவே, சப்த நாடிகளின் ரகசிய பிம்பங்களை ஆதாரமாகக் கொண்டு நவகிரகங்களின் சூட்சும ரகசியங்களோடு ஒப்பிட்டு உலகிற்கு அளிக்கும் சோதிட உபதேசம் நாடி சோதிடமாகும்.

No comments:

Post a Comment