22 Sept 2012

ஞாயிறு அல்லது சூரியன்

ஞாயிறு (விண்மீன்)

ஞாயிறு
சோகோ(SOHO) விலிருந்து ஞாயிற்றின் படிமம்
பெரிய படிமம்
அவதானிப்புத் தரவுகள்
பூமியிலிருந்து
தொலைவு (சராசரி)
1.496×1011 மீ
காணொளி
வெளிச்சம் (V)
-26.8m
வெளிச்சத்
தனிமுதல் அளவு
4.8m
இயற்பியல் பண்புகள்
விட்டம் 1,392,000 கிமீ
சார்பு விட்டம்(dS/dE) 109
மேற்பரப்பளவு 6.09 × 1012 கிமீ2
கன அளவு 1.41 × 1027 மீ3
நிறை 1.9891 × 1030 கிகி
பூமி ஒப்புத் திணிவு 332 946
அடர்த்தி 1411 கிகி மீ−3
பூமி ஒப்பு அடர்த்தி 0.26
நீர் சார்பான அடர்த்தி 1.409
மேற்பரப்பு ஈர்ப்பு 274 மீ நொடி−2
பூமி சார்மேற்பரப்பு ஈர்ப்பு 27.94 கிராம்
மேற்பரப்பு
வெப்பநிலை
5778 K
சூழ்புலத்தின்
வெப்பநிலை
5 × 106 K
ஒளிர்வு (LS) 3.827 × 1026 J s−1
சுற்றுப்பாதைசார் இயல்புகள்
சுழற்சிக்காலம்  
மையக் கோட்டில்: 27நா 6ம 36நி
At 30° latitude: 28d 4h 48m
At 60° latitude: 30d 19h 12m
At 75° latitude: 31d 19h 12m
கலக்டிக் மையம் பற்றிச்
சுற்றும் காலம்
2.2 × 108 ஆண்டுகள்
ஒளிக்கோள உட்கூறுcomposition
ஐதரசன் 73.46 %
ஈலியம் 24.85 %
ஆக்சிசன் 0.77 %
கரிமம் 0.29 %
இரும்பு 0.16 %
நியோன் 0.12 %
நைதரசன் 0.09 %
சிலிக்கன் 0.07 %
மக்னீசியம் 0.05 %
கந்தகம் 0.04 %

              ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும். மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.

           பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வெரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.

            கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment