குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன்
நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர்
குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச்
சக்கரத்தில் ரேவதி
நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி
ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான
நட்சத்திரம் என்பர்.
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
No comments:
Post a Comment