கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள
பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன.
வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம்.
பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7
உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள்
பின்வருமாறு:
- சூரியன் (ஞாயிறு Sun)
- சந்திரன் (திங்கள் Moon)
- செவ்வாய் (Mars)
- புதன் (அறிவன் Mercury)
- குரு (வியாழன் Jupiter)
- சுக்கிரன் (வெள்ளி Venus)
- சனி (காரி Saturn)
- இராகு (நிழற்கோள்)
- கேது (நிழற்கோள்)
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம்
(zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக்
காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு
விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத
ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக்
கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
- மேடம் (மேஷம்)
- இடபம் (ரிஷபம்)
- மிதுனம்
- கர்க்கடகம் (கடகம்)
- சிங்கம் (சிம்மம்)
- கன்னி
- துலாம்
- விருச்சிகம்
- தனு (தனுசு)
- மகரம்
- கும்பம்
- மீனம்
No comments:
Post a Comment