8 Sept 2012

வேத சோதிடம் - அறிமுகம்

                      உலகில் வாழும் உயிர்களுக்கு வழிகாட்டும் தேவரகசியங்கள் அடங்கிய குருநூல் வேதம் எனப்படும். உலகத்தின் முழு முதற்கடவுளான பரம்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பரம் பொருளால் இவ்வுலகை ஆள்வதற்காக நியமிக்கப்பட்ட நவகிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய பிரதான கிரகங்கள் மற்றும் அதன் பண்புகள்; நவகிரகங்களின் உள்ளாதிக்கத்திற்குட்பட்ட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ராசி மண்டலத்தின் பன்னிரண்டு ராசிகள் மற்றும் அவைகளின் பண்புகள், காலக் கணக்கீடுகளை நிர்ணயம் செய்யும் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், திதிகள் மற்றும் கரணங்கள் மற்றும் அவைகளின் பண்புகள் வரையிலான ஆதிக்கஸ் சக்திகளால் இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் முக்கால நிகழ்வுகளை நூல் வழியிலும், யுக்தியின் வழியிலும், ஞானத்தின் வழியிலும் உணர்ந்து உலகிற்கு பலன்களைக் உணர்த்தி வழிகாட்டும் குரு உபதேசம் "வேத சோதிடம்" எனப்படும்.

No comments:

Post a Comment