11 Sept 2012

நாடி சோதிடம் - உயர்வுகள்

                       நாடி சோதிடம் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களாக இவ்வுலக ஆன்மாக்களுக்கு உபதேசிக்கப்பட்டு வருகின்றது. அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு ஸ்ரீ காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு ஸ்ரீ கோரக்கருக்கு உபதேசம் செய்த நாடிநூல் உலகப்பிரசித்தி பெற்றதாகும். தேவேந்திரனால் நடத்தப்படும் தேவசபையை காகபுஜண்டர் நாடி சோதிடம் நிர்ணயம் செய்கிறது. நாடி சோதிடம் மூலம் இவ்வுலத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் பலன் களையும் தெரிந்து கொள்ளலாம். உலத்தில் ஒரு மனிதனை சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வழிகாட்டும் குருநூல் நாடி சோதிடம் ஆகும். மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை உரைக்கும் நாடிநூல் அந்த தனிப்பட்ட மனிதனின் உயிர் ரேகைகளான நவரேகைகளிலொன்றை மையமாகக் கொண்டு சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவநாடிகளில் ஒரு நாடியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தைப் பற்றிய பிற சூட்சும ரகசியங்கள் சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியாலும் கால நிலையை மையமாகக் கொண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
                     வேத சோதிடமானது ஒரு தனிப்பட்ட மனிதனின் (சோதிடரின்) சோதிடக் கல்வி, யுக்தி மற்றும் ஞானத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால் பலன்களின் நடைமுறைகளில் பிறழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும்; வேத சோதிடர் பலன்களை நிர்ணயிக்கும் பொழுது அவரின் ஊழ்வினை அவரை கட்டுப்படுத்துவதாலும் வேத சோதிடப் பலன்கள் முழுமையான பலன்களை இவ்வுலகிற்கு அளிப்பது மிகக்கடினமான ஒன்றாக இருப்பதால் ஊழ்வினைக்குட்படாத முனிவர்களால் நிர்ணயிக்கப்படும் நாடி சோதிடப்பலன்கள் உயிருள்ள பலன்களாகும். வேத சோதிடப்பலன்களின் மூலநூல் உரைநடை வழியைக் கொண்டுள்ளதால் பலன்களின் உயிர் தன்மை முழுமைபடுத்துவதில் சிரமங்கள் இருக்கின்றது. உயர்வான ஊழ்வினைகளை சுமக்கும் தர்ம சிந்தனைக் கொண்ட வேத சோதிடரால் மட்டுமே உயிருள்ள சோதிடப் பலன்களை இவ்வுலகிற்கு கொடுக்க முடியுமென்பதால் இத்தகைய நிலை கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இப்புவியில் வாழ்வதால் வேத சோதிடத்தின் பலன்கள் முழுமை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன.
                         நாடி சோதிடத்தின் மூலநூல் செய்யுள் வடிவத்தைக் கொண்டதாகும், "தமிழ்" ஓர் உயிருள்ள மொழியாகும். எனவே, தமிழில் உயிர் எழுத்துக்கள் என்றும்; உடல் (மெய்) எழுத்துக்கள் என்றும்; உயிருடல் எழுத்துக்கள் (உயிர்மெய் எழுத்துக்கள்) என்றும்; மேற்கண்ட அனைத்தையும் இயக்கும் ஆயுத எழுத்து ஒன்றுமாக தமிழ்மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாலும்; மேற்கண்ட நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் தேவரகசியமாக ஐந்தாவது பிரிவான ஆண் எழுத்துக்கள் மற்றும் பெண் எழுத்துக்கள் என்னும் சூட்சுமப் பிரிவு தமிழ்மொழியில் உள்ளதால் ஆண் எழுத்துக்களையும் பெண் எழுத்துக்களையும் சமமான ஆற்றலோடு பாடல் வகையில் பிணைத்து பலன்களை முறைப்படுத்தி பாடல் வடிவில் பலன்களை இவ்வுலகத்திற்கு சொல்கின்றபடியினால் எவ்வாறு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முழுமையாக புணர்ச்சி செய்தால் அதன் விளைவாக ஒரு முழுமையான உயிர்ப்பொருள் இவ்வுலகத்தில் படைக்கப்படுமோ அவ்வாறே நிலையுடன் நாடி சோதிடப்பலன் கள் "அறம்பாடல்" என்னும் சூட்சுமக்கயிற்றால் பிணைக்கப்பட்டு வெளியிடப்படுவதால் உலகத்தில் வாழும் அனைத்து சோதிட சாஸ்திரத்தினும் உயர்வுள்ளதாய் "தாய்" சாஸ்திரமாக நாடி சோதிட சாஸ்திரம் விளங்குகிறது.
                  பல ஆண்டுகளுக்கு முன் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உலகத்தின் பல்வேறு ரகசியங்களைப் பற்றி போதித்து வருகையில் அருள்குரு கோரக்கர் தன்னுடைய குருவாகிய காகபுஜண்டரிடத்திலே இவ்வுலக மானிடர்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சூட்சுமங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டபடியினால் அருள்குரு காகபுஜண்டரும் அதற்கு இணங்கி இந்திந்த காலத்தில் இன்னவயது கொண்ட இன்ன பிறப்பு விவரங்களைக் கொண்ட இந்த மானிடர் நாடிநூல் சுருதியை வேண்டிக் கேட்பார், அப்போது அந்த மானிடருக்கு இன்னன்ன பலன்கள் நடக்கும் எனப் பாடல் வடிவில் தன் சீடரிடத்திலே திருவாய் மலர்ந்தருளினார். அருள்குரு காகபுஜண்டரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற தேவரகசியங்களை ஓலைச்சுவடியில் எழுதி அருள்குரு கோரக்கர் தன்னுடைய ரகசியப் பேழையில் வைத்து அவரின் ரகசிய இடமாகிய கொல்லிமலை கோரக்கர் குண்டத்தில் வைத்து பாதுகாத்து வைத்தார். அருள்குரு காகபுஜண்டர் மற்றும் அருள்குரு கோரக்கரின் குருவருளால் மேற்படி குருமார்களின் கலியுக வாரிசான பாஸ்கரமகரிஷி அவர்களுக்கு புதையலாக கோரக்கரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்று இவ்வுலகோருக்கு குருவருள் ஆணைப்படி விரித்துரைக்கப்படுகின்றது. எனவே, முனிவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற நாடி சோதிட சாஸ்த்திரம் பிற சாஸ்திரத்தினும் தலையானதாகும்.

No comments:

Post a Comment