சூரியன் விண்மீன் வகைப்பாட்டில் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °C ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு
விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன்
பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம்
ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது
G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. சூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது.
மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு
வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும்
தகவலாகும்.
நிலவு கதிரவனைக் கடப்பதை சூரிய ஆராய்ச்சிக் கலமான STEREO B பதிந்துள்ள குறும்படம்
சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.
- உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )
- உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )
- உலோகமில்லா விண்மீன்கள் (population iii )
இவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.