பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய
திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம்
நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி நிறந்து விளங்க மணப்
பொருத்தம் பார்த்தனர். திருமனத்திற்குரிய பொருத்தங்களாக
- " பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
- உருவு, நிறுத்த காமவாயில்,
- நிறையே, அருளே, உணர்வோடு திருவென
- முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை
- இளமை
- வனப்பு
- வளமை
- தறுக்கண்
- வரம்பில் கல்வி
- நிறைந்த அறிவு
- தேசத்தமைதி காத்தல்
- குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.
சீவக சிந்தாமணியில்
குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட பின்பே நிகழ்ந்ததாகக்
கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம்
பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து
பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது
No comments:
Post a Comment