திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச்
சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு
ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில்
பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும்
பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும்,
தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை
- " மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
- சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
- மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
- மாகடலும் போன்றதே"
எனக் குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment