தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில்
நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம்,
மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம்
கேட்டு முடிவு செய்தனர்.
- " மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
- கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
- கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்"
மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் - கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" கம்ப ராமாயணத்திலும்
வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம்.
இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும்
பின்பற்றப்பட்டது.
No comments:
Post a Comment