தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம்
பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல்
அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை
- ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய
- கைபுனை வனப்பின் கான்முதல் தோறும்
- ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்"
என்ற பெருங்கதை
ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை
குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற
முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க
நடுதல் வழக்கம். இறை வழிபாடி நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல்
அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற
செயல்கள் எனலாம்.
No comments:
Post a Comment