மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்
- பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
- கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"
என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த
காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு
உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து
அறிவித்தனர். பெருங்கதையில்
மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச்
சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து,
மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின்
மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில்
மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை
ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும்,
திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது.
மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும்
மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன்
மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும் அவை அரச கட்டளைஆகையால்
இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும்
உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய
செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த
உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு
வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும்
இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது.
No comments:
Post a Comment