மரபு வழி மணம்
இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின்
பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி
மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது
ஏறு தழுவுதல்
தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர்
மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள்
தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில்
மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை
அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு
வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை
மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி
முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர்
கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல்
இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின்
ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக
இருந்தனர் என்பதை அறியலாம்.
No comments:
Post a Comment