பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும்
வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல்
மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி
ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம்
ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக
அறியலாம்.
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக
- மரபு வழி மணம்
- சேவை மணம்
- போர் நிகழ்த்தி மணம்
- துணங்கையாடி மணம்
- பரிசம் கொடுத்து மணம்
- ஏறு தழுவி மணம்
- மடலேறி மணம்
ஆகிய மண முறைகளைக் காணலாம்.
No comments:
Post a Comment