கை கூப்பி வணக்கம் செலுத்துதல்
இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.
பெரியோரைப் பெயரிட்டு அழைக்காமை
பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.
காலணிகளை வீட்டுக்கு வெளியில் அல்லது வாசலில் விடல்
வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த
ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால்
யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.
விருந்தோம்பல்
வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.
No comments:
Post a Comment