மன்றல்
'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.
வதுவை
வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment