25 Jun 2012

தமிழர் நாட்டுப்புறவியல்

ஒப்பாரி - மகனைப் பலிகொடுத்த தாய்
                            நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா மகனே பாரத்துவக்கெடுத்தோ உங்களுக்கு பயந்தவெடி வச்சானோ உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ உங்கள பேசாமல் சுட்டெறிந்தான் மகனார் உன்ன சந்தியல கண்டடத்தை உன்னைபெத்த கறுமி தலைவெடித்துப் போறனையா
                 தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கி பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ.கா: 2008 - தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.

No comments:

Post a Comment