தமிழர் சமூக அமைப்பு சாதிய
படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக
அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக
எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட
நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல
காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை
வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு
நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
No comments:
Post a Comment