தற்காப்புக் கலைகள்

நடனம், இசை, மொழி போன்றே
ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது.
தென்னிந்தியாவில்
இருந்த நாடுகள் தம்மோடும்
பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக்
கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ,
பாண்டிய
நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய
சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக்
குறிக்கின்றது. சிலம்பம்,
வர்மக்கலை,
குத்துவரிசை,
அடிதடி,
மல்லாடல்
ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.
யோகக்கலை

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது "யோகாசனம்"
ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும்
வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம்
மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு
அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது. சுவாமி
சிவானந்தா, யாழ்ப்பாணம்
யோகர்
சுவாமியின் சீடரான சத்யகுரு
சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி
சச்சிதானந்தா, வேதாத்திரி
மகரிசி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு
செய்துள்ளார்கள்.
No comments:
Post a Comment