நகைச்சுவை
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. என்.எஸ்.கிருஸ்ணன், சந்திரபாபு, தங்கவேல், நாகேஷ் ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். வடிவழகன், லியோனி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
பேச்சுக்கலை
அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில்,
நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில்
பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். அண்ணாத்துரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் ஆறுமுகநாவலர்
போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாக பலவகையில்
வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள்
மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய
சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து இலங்கை ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள்.
வைகோ வரலாற்றுப் பெட்டகம்
ReplyDelete