நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. நமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.
சூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச்
சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது
இதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள்
விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில்
கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250
பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால்
சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.
No comments:
Post a Comment