சூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே. சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்நுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.
No comments:
Post a Comment